2025 ஜூலை 05, சனிக்கிழமை

தவக்காலத்தை சிந்திக்கவைக்கும் திருப்பாடுகளின் காட்சி

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


தவக்காலத்ததை சிறப்பிக்கும் திருப்பாடுகளின் காட்சி எனும் பாஸ் நிகழ்வு மன்னார் பேசாலையில் புனித வெற்றி தியான மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்டத்தின் பேசாலை கத்தோலிக்க கிராமத்தின் பாரம்பரிய கிறிஸ்தவ மரபான உடக்குகலான பாஸ் எனப்படும் கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சிகள் காண்பிக்கப்பட்டிருக்கின்றது.

பேசாலை புனித வெற்றி அன்னை வழாகத்தில் அமைந்திருக்கும் மிகப்பழமை வாய்ந்த அரங்கில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. உலக வாழ் கத்தோலிக்கர்கள் 40 நாட்களை தவக்காலமாக அனுஸ்டித்து வரும் நிலையில் அதன் மிக முக்கிய பகுதியாக புனிதவார நிகழ்வுகள் இருக்கின்றது.

இந்நிலையில் குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பித்து கடந்த ஒரு வாரத்தை புனித வாரமாக அனுஸ்டித்து வந்த உலக கத்தோலிக்க சமூகம் இயேசுவின் பாடுகள், மற்றும் மரணம் என்பவற்றை தியாணித்து அதன் பின் உயிர்ப்பு ஞாயிரை கொண்டாடுகின்றது.

இந்நிலையில் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அணைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தவக்காலமும் அதன் ஒரு அங்கமாகிய புனித வார நிகழ்வுகளும் ஆன்மீக ரீதியில் மிக சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது.

புனித வாரத்தை ஒட்டி இயேசுவின் திருப்பாடுகளை சிந்திக்கும் முகமாக மன்னார் வங்காலையில் மனித பாத்திரங்களால் சித்தரிக்கப்பட்ட பாஸ் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றது.

இதனை அடுத்து மன்னார், பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மக்களால் சுமார் 150 ஆண்டு காலங்களாக தவக்காலங்களில் அரங்கேற்றப்படும் திருப்பாடுகளின் காட்சிகளை நிகழ்வுகள் இம்முறை புனித வார காலத்தின் புனித வெள்ளியன்று இடம்பெற்றிருக்கின்றது.

பேசாலை கத்தோலிக் சமூகத்தால் ஆரம்ப காலங்களில் மூன்று தினங்களாக காண்பிக்கப்பட்டு வந்த திருப்பாடுகளின் காட்சி நிகழ்வுகள் இம்முறை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதன் முக்கிய சில பகுதிகள் மட்டும் காண்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஆரம்ப காலங்களில் ஒன்பது பிரசங்கங்களாக காண்பிக்கப்பட்டு வந்த திருப்பாடுகளின் காட்சிகளில் மிக முக்கியமானதும் இயேசுவின் வாழ்வின் இறுதி நேர நிகழ்வுகளான 7 தொடக்கம் ஒன்பது வரையிலான பிரசங்கங்களான இயேசுநாதர் சிலுவையில் அறைதல்,சிலுவையில் மரித்தல் மற்றும் சிலுவையில் இருந்து இறக்குதல் என்பன காண்பிக்கப்பட்டிருக்கின்றது.
 
புனித வெள்ளி அன்று பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பாடுகளின் காட்சி நிகழ்வுகளில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,பேசாலை பங்குத்தந்தை எஸ்.வி.அவிதப்பர் உட்பட ஏராளமான குருக்கள,துறவிகள் உள்ளடங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்வை கண்டு களித்திருக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .