2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

திருமலையில் அப்பர் குருபூசை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

 
கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஆரம்பித்த 17ஆவது வருட பன்னிரு திருமுறை முற்றும் ஓதுதல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை பேரவையின் மண்டபத்தில் நிறைவுபெற்றது.

அதற்கு முன்பதாக சமய குரவர்களான அப்பர், சுந்தரர் ஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களின் திருவுருவப்படங்களும் பன்னிரு திருமுறைகளும் திருகோணமலையில் உள்ள உவர்மலை வழிவிடு விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக இந்து இளைஞர் பேரவையின் பணிமனைக்கு பேரவையின் தலைவர் த.உதயசங்கர் தலைமையில் எடுத்து வரப்பட்டது.

பின்னர் அறுபத்து நான்கு நாயன்மார்களுக்கும் நால்வர் பெருமக்களுக்கும் புஜை நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஓதுவார்கள் பன்னிரு திருமுறை முற்றும் ஓதுதலை நிறைவு செய்தார்கள். பின்னர் ஓதுவார்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. திருநாவுக்கரசு நாயனார் குருபூசையும் இன்று அத்துடன் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X