2025 ஜூலை 05, சனிக்கிழமை

உலக கிறிஸ்தவ வாழ்வுச் சமூக தினத்தை முன்னிட்டு தன்னாமுனையில் திருப்பலி

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கிறிஸ்தவ வாழ்வுச் சமூக தினத்தைக் கொண்டாடுகின்றார்கள்.

அந்த வகையில் தாண்டவன்வெளி கிறிஸ்தவ வாழ்வுச் சமூகத்தில் உறுப்பினர்கள் இணைந்து பங்குத்தந்தை அருட்பணி. சி.வி. அன்னதாஸ் அடிகளின் தலைமையின் கீழ் சிறப்புத் திருப்பலியை நேற்று புதன்கிழமை ஒப்புக்கொடுத்தனர்.

இதில் குறிப்பாக பழைய கிறிஸத்வ வாழ்வு சமூக உறுப்பினர்கள், ஏனைய பங்குகளில் இயங்கும் உறுப்பினர்கள,; அருட்சகோதரிகள், இறைமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய திருப்பலியில் புனித இஞ்ஞாசியாரின் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி பங்குத் தந்தையினால் கருத்துரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ வாழ்வுச் சமூக உறுப்பினர்கள் அனைவரும் தங்களது அர்ப்பண வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்டனர்.

திருப்பலியின் இறுதியில் புதிய இளைஞர் யுவதிகளுடன் சிறு கலந்துiயாடல் நடைபெற்றது. ஐக்கிய மதிய உணவு, மற்றும் டொம்போலா விளையாட்டுக்களில் அனைவரும் பங்கு கொண்டதுடன், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது என கரித்தாஸ் எகெட் நிறுவக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் மைக்கல் தெரிவித்தார்.  \






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .