2025 ஜூலை 05, சனிக்கிழமை

கண்டி மஹியாவை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, மஹியாவை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் 158ஆவது வருடாந்த சித்ரா பௌர்ணமி தேர்த் திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை  காலை சங்காபிஷேகம், பாற்குடப் பவனி ஆகியன நடைபெறும்.  அன்றையதினம் மாலை நடைபெறவுள்ள விசேட பூஜையை தொடர்ந்து  அன்னை பராசக்தி, விநாயகர்; மற்றும் முருகப் பெருமான்; சகிதம் சித்திரத்தேரில் எழுந்தருளி பிரதேசத்தைச் சுற்றி வலம்வரவுள்ளார்.

மஹியாவை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழா இம்மாதம் முதலாம் திகதி  ஆரம்பமாகியது. எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வைரவர் மடையுடன் திருவிழா முடிவடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .