2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புல்லுமலை செப மாலை அன்னை ஆலய திருவிழா திருச்சொருவ பவனியுடன் கொடியிறக்கம்

Super User   / 2012 மே 21 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பில் பிரபல்யம் வாய்ந்த புல்லுமலை செப மாலை அன்னை ஆலய திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சுரவ பவனியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டது.

திருவிழா திருப்பலியை  மட்டு. - அம்பாறை மறை மாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.  அன்னையின் திருச்சுரவ யாத்திரை 27 வருடங்களின் பின் நடை பவனியாக தாண்டவன் வெளி ஆலயத்திருந்து கொண்டுவரப்பட்டது.

யுத்த சூழல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் முதல் தடவையாக வண. பிதா டக்ளஸ் தலமையில் முதல் தடவையாக இந்த பாத யாத்திரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அன்னையின் ஆசி பெற பெருந்திரளான தமிழ் மற்றும் சிங்கள மக்கள் வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X