2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போரதீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கும் கலியாண கால் வெட்டு நிகழ்வும்

Super User   / 2012 ஜூன் 03 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்தின் சிறப்புமிக்க சுமார் 200 ஆண்டுகள் பழமையான போரதீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனிச்சிறப்பு மிக்க பூசை முறைகளையும் வழிபாட்டு முறைகளையும் உள்ளடக்கியதாக இந்த திருச்சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோவலனை பாண்டிய மன்னன் இரண்டாக பிளந்து மரண தண்டனை விதித்த போது, சிவபெருமான் அவனுக்கு மீள உயிர்கொடுக்கும் நிகழ்வை தற்போதும் அனுஸ்டிக்கும் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பகல் ஆலயத்தில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையிலான திருமண நிகழ்வை குறிக்கும் நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வு கோலாகலமாக இன்று இடம்பெற்றது. இதன்போது அலங்கரிக்கப்பட்ட பந்தலில் உள்ள கண்ணகி சிலைக்கு ஆலய பிரதம குரு தன்னை கோவலனாக கொண்டு தாலியை கட்டி இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றது.

அதனையடுத்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் அம்பாள் இருந்தப்பட்டு சிறுமிகள் அதனை தாலாட்ட திருவூஞ்சல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X