2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Super User   / 2012 ஜூன் 04 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்ற திருச்செபமாலையை தொடர்ந்து கொடியேற்றமும் அதனை தொடர்ந்து குழந்தை இயேசு கெபியில் விசேட வழிபாடுகளும் நடைபெற்றன.

இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் நவநாள் வழிபாடுகள் தினமும் மாலை 5 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய பெருவிழாவில் எதிர்வரும் 12ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும், 13ஆம் திகதி காலை 5.15 மணிக்கு முதல் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, 6.30 மணிக்கு திருவிழாத் திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

திருச்செரூப பவனி 13ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.30 மணிக்கும் இடம்பெறவுள்ளதாக பங்குத்தந்தை அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X