2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அந்தோனியார் திருவிழா

Super User   / 2012 ஜூன் 13 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}



(நவரத்தினம், கே.என்.முனாஷா , கே.டெனியல்)


வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 124ஆவது வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலி பூஜைகளின் பின்னர் வண்ணத்தேரிலான சுற்றுப்பிரகாமும் இடம்பெற்றிருந்தது.

பல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு இறையருள் வெண்டியிருந்துடன் வீதிகளில் பக்தி இசையும் ஒலித்து வந்திருந்தனர்.
இதேவேளை, நீர்கொழும்பு - தளுபத்தை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்றது. காலை முதல் நடைபெற்ற தேவாலய வழிபாடுகளின் பின்னர் பிற்பகல் 4 மணியளவில் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர உட்பட நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வருகை தந்திருந்த பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இன்று புதன்கிழமை காலை 5.15 மணிக்கு முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, திருவிழாத் திருப்பலி 6.30 மணிக்கு யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் மாலை 5 மணிக்கு திருச் செபமாலையுடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாடுகள் திருப்பலியுடன் நிறைவுபெற்றன. அத்துடன் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவும் இன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X