2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆயிரம் பக்கங்களில் அரிய படங்களுடன் கோணேஸ்வர ஆலயம் வரலாற்று நூல்

Menaka Mookandi   / 2012 ஜூன் 14 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


பாடல் பெற்ற திருக்கோணேஸ்வராலயம் பற்றிய வரலாற்று நூல் ஒன்றை வெளியிடும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தற்போது இந்நூல் அச்சிடப்பட்டு வருவதாகவும் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் க.அருள்சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அரிய படங்களுடன் ஆயிரம் பக்கங்களில் இவ்வரலாற்று நூல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வெளியிடும் நிகழ்வு விரைவில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோணேஸ்வராலயத்தின் நீண்ட கால வரலாறு, அதையொட்டிய கல்வெட்டுக்கள், பதிகங்கள், கட்டுரைகள் மற்றும் கிடைத்தற்கரிய படங்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்து இவ்வரலாற்று நூல் தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆலயத்தின் இருப்பினை வரலாற்றுச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தும் நூலாக  எதிர்காலச் சந்ததியினருக்கு பயன்படும் வண்ணம் இவ்வரலாற்று நூல் ஆலய பரிபாலன சபையால் வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X