2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை சிவன் கோவில் மகோற்சவம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதசுவாமி (சிவன்) தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்ற நிகழ்வை ஆலயத்தின் பிரதம குருவான வேதாகமகிரியாநிதி சிவஸ்ரீ கனக.நித்தியானந்தக் குருக்கள் பிரமோற்சவ குருவாக இருந்து நடத்தி வைத்தார்.

எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை சித்திரத்தேர்த் திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை ஆனி உத்தர தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் புதன்கிழமை பூங்காவனத் திருவிழாவும் நடைபெறும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X