2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தாமரைக்கேணி மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, தாமரைக்கேணி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு பெரும்சாந்தியும், வருடாந்த சக்தி திருச்சடங்கு விழாவும் 19ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில் இன்றைய தினம், குடமுழுக்கு பெரும்சாந்தி சைவ சித்தாந்த சாகரம், அருட்கவியரசு, ஆச்சாரிய பண்டித, விஸ்வ மிரம்மஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை மகாதூபி அபிஷேகமும், திரிசூல யந்திர அபிஷேகமும் இடம்பெற்ற்றது. 19ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி நேற்று புதன்கிழமை பால்வார்த்தல் நிகழ்வ காலை நடைபெற்று மாலை 4 மணிக்கு மகா மந்திர யாகம் நடைபெற்றது.

எதிர்வரும் 28ஆம் திகதிவரை பூஜைகள் நடைபெற்று, வருடாந்த சக்தி திருச்சடங்கு விழா 28ஆம் திகதி ஆரம்பமாகி 3ஆம் திகதி நடைபெறும் திருக்குளிர்த்தியுடன் நிறைவடையும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X