2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாமாங்கேஸ்வரர் கொடியேற்றம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

இலங்கையில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  இன்று காலை விநாயக வழிபாட்டுடன் உற்சவ நிகழ்வுகள் ஆரமம்பமாகி யாகபூசை, கும்ப பூசை, என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மூல மூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை இடம்பெற்றது. பின்னர் கொடிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலமம் வந்ததுடன், வசந்த மண்டபத்தில், விநாயகருக்கு தீபாராதனை இடம்பெற்று ஊர்வலமாக கொடித்தம்பத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் போது, கொடித்தம்பத்துக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், வேத நாத பாராயணங்களுடன் கொடியேற்றம் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து கொடித்தம்பத்துக்கு அபிசேகம் இடம்பெற்றதுடன்,தீபாராதனைகளும் இடம்பெற்றன. தீர்த்தம் எதிர்வரும் ஆடியமவாசை தினமான 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X