2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 17 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாகரை கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. 

கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் தொடர்ந்து ஐந்து தினங்கள் நடைபெற்று இறுதி நிகழ்வான தீமிதிப்புடன் நிறைவு பெற்றது.

இவ் உற்சவங்கள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

உற்சவத்தின் உதவிக் குருக்களாக மிராவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.செல்வநாயகம் குருக்கள், கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலய குரு சிவஸ்ரீ.இ.மகேஸ்வரன் குருக்கள், புச்சாக்கேணி ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலய குரு சிவஸ்ரீ.சொ.ரதன் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X