2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்.வசாவிளான் புனித உத்தரிய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Kogilavani   / 2012 ஜூலை 22 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ். வசாவிளான் புனித உத்தரிய மாதா ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வசாவிளான் ஆலயத்தின் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை அச்சுவேலி பிரதேச இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

திருவிழா திருப்பலியை பங்குத் தந்தை அருட்திரு அன்ரனிபால அடிகளார், வசாவிளான் அருட் தந்தையர்களான அருட்திரு து.தவராஜசிங்கம், அருட்திரு க.ஜேம்ஸ் சிங்கராஜர், அருட்திரு அ.ஜெயசீலன், அருட்திரு எ.எட்விநாதன் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

கடந்தகால போர் காரணமாக ஆலயம் முற்றாக சேதமடைந்த நிலையில் ஆலய கட்டிடத்துக்குள் பந்தல் அமைக்கப்பட்டு திருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X