2025 ஜூலை 14, திங்கட்கிழமை

திருமலை புனித மரியாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தின் 119ஆவது வருடாந்த திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகியது.  ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜோர்ஜ் திசநாயக்கா அடிகளார் கொடியேற்ற நிகழ்வை நடத்தி வைத்தார்.

எதிர்வருகின்ற 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு அன்னையின் திருச்சொரூபம் இறக்கப்பட்டு அருட் பணி ஜோர்ஜ் திசநாயக்கா அடிகளாரின் தலைமையில் திருப்பலி கொடுக்கப்படும்.

குறித்த தினம் மாலை 5 மணிக்கு ஆயரின் பிரதிநிதி அருட்பணி சி. நோயல் இமானுவல் அடிகளாரின் தலைமையில் விவலிய வழிபாடும் திவ்விய நற்கருணை ஆசிரும் அதனை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் நடைபெறும்.

மறுநாள் 15ஆம் திகதி புதன்கிழமை திருவிழா திருப்பலி திருகோணமலை மறை மாவட் ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிறப்பிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .