2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாமாங்க பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


ஸ்ரீமத் தட்ஷண கைலாயம் என போற்றப்படுகின்ற லங்காபுரியில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்து மக்களுக்கு அருளாட்சி புரிகின்ற அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையாருக்கும் அவரைச் சூழ்ந்திருந்த பரிபார மூரத்திகளுக்கும் பாலஸ்தாபன நடைபெற்றது.

இந்நிகழ்வில் நேற்றுமுன் தினம் மாமாங்கேஸ்வரர் வழிபாடும் கிரியாரம்பமும் நடைபெற்று அனுக்ஞை, கணபதிஹோமம், நகவ்கிரக ஹோமம், திருவருட்பிரசாதம் வழங்கல் போன்றன இடம்பெற்றன.

அதனைத் தொடரந்து நேற்று யாகபூசைகள் இடம்பெற்று மஹாபூர்ணாகுதி தனாதிகள் என்பன இடம்பெற்று பின்னர் மாமாங்கோஸ்வரருக்கும் ஏனைய பரிபார மூர்திகளுக்கும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

இதன் போது பலநூற்றுக் கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X