2025 மே 19, திங்கட்கிழமை

சமாதானத்தை வலியுறுத்தி மாபெரும் செபமாலை பேரணி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 29 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

இலங்கையில் சமாதானத்தினை வலியுறுத்தி யாழ்.நகரில் மாபெரும் செபமாலை பேரணியொன்று  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மரியாயின் சேனை குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணியானது பாண்டியன்தாழ்வு சென்.அன்னாள் ஆலயத்தில் ஆரம்பமாகி சுண்டுக்குழி வழியாக கண்டி வீதி, அடைக்கல மாதா ஆலயம், குருநகர் பாங்சால் வீதி வழியாக மரியன்னை பேராலயத்தில் நிறைவடைந்தது.

பாப்பரசரின் பிரதிநிதி அதிமேதகு ஜோசப் ஸ்பிரிரேரிவ், யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, குருநாகல் ஆயர் கிளிற்ரஸ் சி.பெரேரா ஆண்டகை தலைமையில் செபமாலை வழிபாடு நடைபெற்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X