2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பு ஆலயத்தில் 'அற்புதம்'

Kogilavani   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

நவக்கிரக ஆலயத்தில் அமைந்துள்ள சூரியபகவான் சிலையானது மேற்கு பக்கம் நோக்கி திரும்பியுள்ள அற்புதமான நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள சூரிய பகவானின் சிலையே இவ்வாறு திரும்பியுள்ளது.

ஆலய கதவினை நேற்று இரவு மூடிவிட்டுச்சென்ற ஆலய நிர்வாகி ஒருவர் இன்று காலை சனிக்கிழமை ஆலய கதவுகளை திறந்து வழமைபோன்று விக்ரகங்களை கழுவும் போதே இந்த அற்புதத்தை கண்டுள்ளார்.

கிழக்கு திசையினை நோக்கியிருக்கின்ற சூரியபகவான் சிலையானது இன்று மேற்கு பக்கமாக 30 பாகையளவில் திரும்பியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த அற்புத காட்சியை காண்பதற்காக பெருமளவான அடியார்கள் ஆலயத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X