2025 மே 19, திங்கட்கிழமை

கற்சிலை கண்ணீர் சிந்தும் அதிசயம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)


மட்டக்களப்பு திருப்பெருந்துறை முருகன் ஆலயத்தில் உள்ள நவக்கிரகத்தில் சூரியபகவானின் சிலை மேற்கு பக்கம் நோக்கி திரும்பியுள்ள அற்புதமான நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில், மலையகத்திலும் ஆலயமொன்றில் கற்சிலையொன்று கண்ணீர் சிந்திய  அதிசயமொன்று நிகழ்ந்துள்ளது.
 
லிந்துலை, மட்டுகெல தோட்டத்திலுள்ள கருங்கல் சிலையே  திடீரென கண்ணீர் சிந்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமையான நேற்று  இடம்பெற்ற இந்த அதிசயமான சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிந்துலை, சென்கூம்ஸ் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டுகெல 7ஆம் இலக்க கொலனியிலுள்ள கற்சிலையிலிருந்தே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றது.

இந்தக் கற்சிலைக்கு நேற்று நண்பகல் மட்டு;கெல தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் விளக்கேற்றுவதற்கு வந்தபோது கற்சிலையின் கண்கள் உள்ள  பகுதியிலிருந்து நீர் வடிவதைக் கண்டுள்ளார்.

இதன் பின்னர் இது தொடர்பில் அவர் தோட்ட மக்களுக்கு அறிவித்தார். இதனையடுத்து தோட்ட மக்களும் இந்த அதிசயத்தினைக் கண்டுள்ளனர். அதன் பின்பு தோட்ட மக்களும் சம்பவத்தை கேள்வியுற்ற அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்களும் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • sujeevan Monday, 10 December 2012 06:57 AM

    கலியுகதில் இவ்வாறு நடப்பது கவலைப்படகூடிய ஒன்றுதான்.

    Reply : 0       0

    sanjewan Friday, 14 December 2012 02:45 AM

    மூட நம்பிக்கைகலின் அல்லது மூடர்கலின் அடையாலமே

    Reply : 0       0

    yoga Thursday, 20 December 2012 01:12 PM

    உலகம் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X