2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புளியந்தீவு புனித மரியாள் ஆலயத்திற்கு நிரந்தர பாலன் குடில் கையளிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, புளியந்தீவு புனித மரியாள் ஆலயத்திற்கு நிரந்தர பாலன் குடில் எனப்படும் மாட்டுத் தொழுவத்தினை இராணுவத் தலைமையகம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பேராலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி பொன்னையா யோசப்பிடம் இராணுவத்தின் கிழக்கு பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா, 23ஆவது பரிகேட்டின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ராஜகுரு, 231ஆவது பிரிகேட்டின் கட்டளைத்
தளபதி கேர்ணல் சுதங்க திலகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பினையடுத்து இந்நிகழ்வு நடைபெற்றது.

இது போன்ற பாலன் குடில்கள் யாழ்ப்பாணம் மற்றும ;கொழும்பு ஆகிய இடங்களில் இராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, எதிர்வரும் வருடத்தில் நடைபெறவுள்ள இராணுவத் தலைமையகத்தின் கரோல் நிகழ்வுகளில் மட்டக்களப்பிலிருந்தும் கரோல் குழுவினர் வருகை தரவேண்டும்; என தான் விரும்புவதாக கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி பெரேரா தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .