2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய முத்தேர் பவனி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சுவர்ணஸ்ரீ, ஆர்.கமலி


இலங்கையில் ஈழத்துப் பழனி என்று போற்றப்படும் பொகவந்தலாவை அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் 78ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவ முத்தேர் பவனி இன்று 18ஆம் திகதி இடம் பெற்றது.

இந்த முத்தேர் பவனி பெருவிழாவினை முன்னிட்டு மகோற்சவ ஆரம்பமும் கொடியேற்றமும் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றது. தொடர்ந்து மகோற்சவ கால கிரியை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று 18ஆம் திகதி இடம்பெற்ற முத்தேர் பவனியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாளை 19ஆம் திகதி தீர்த்தோற்சவமும் 20ஆம் திகதி பூங்காவனமும் இடம் பெறவுள்ளதாக ஸ்ரீதண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சபையும் ஸ்ரீ கதிரேசன் இந்து மாமன்றமும் அறிவித்துள்ளன.





  Comments - 0

  • V. Jeevanandaraja Monday, 21 January 2013 07:03 AM

    மிகவும் மனதுக்கு ரம்மியமக உள்ளது.

    Reply : 0       0

    dinot roshanth Wednesday, 23 January 2013 06:15 AM

    இப்படிபட்ட செய்திகள் இடம்பெறுவது நல்லது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X