2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்பாள் பாற்குட பவனி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சுவர்ணஸ்ரீ


நாவலப்பிட்டி நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மாசிமக உற்சவத்தினை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரூடாக இன்று 22ஆம் திகதி இடம்பெற்ற பாற்குட பவனியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாவலப்பிட்டி ஸ்ரீ கதிரேசன் ஆலயத்துக்கு அருகிலிருந்து ஆரம்பமான இந்தப் பாற்குட பவனி கொத்மலை வீதி வழியாக நாவலப்பிட்டி நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தினை வந்தடைந்தது.

நாவலப்பிட்டி நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தின் மாசிமக மஹோற்சவத்தினை முன்னிட்டு கடந்த 16ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கிரியா கால பூஜைகள் இடம் பெற்று வந்தன.

நாளை மறுதினம் 24 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 25ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம் பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X