2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருகோணேஸ்வர் பெருமானின் வருடாந்த நகர்வலம் ஆரம்பம்

Super User   / 2013 மார்ச் 11 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கஜன்


வரலாற்று பெருமை மிக்க  திருகோணேஸ்வர் பெருமானின் வருடாந்த நகர்வலம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.

ஆலயத்தில் இருந்து வெளி உலா வந்த பெருமானை  கோட்டை வாயிலுக்கு அண்மையில் வைதது திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பந்துல குணவர்த்ன  வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து  திருகோணேஸ்வர் வீதி, ஏகாம்பரம் வீதி வழியாக  திருக்கடலூர் செல்வநாயகபுரம் பகுதி நோக்கி பெருமான் புறப்பட்டுச் சென்றார்.

வீதிகள் மகர தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.  அடியவர்கள் நிறைகுடம் வைத்து பெருமானை  வரவேற்றனர். இந்த நகர்வலம் தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X