2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

புன்னையம்பதி அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று ஞாயிற்றக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடித்தம்ப அபிசேகம், ஸ்தம்ப பூஜை, அம்பாள் உள்வீதியுலா மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று அடியார்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் என்பன இதன்போது வழங்கப்பட்டன.

தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 9 ஆவது நாளான 25 ஆம் திகதி இரதோற்சவம், 10 ஆம் நாளான  26 ஆம் திகதி தீர்த்தோற்சவமமும் நடைபெற்றவுள்ளது.

மஹோற்சவக்குரு தியாகராஜா கமலராஜக்குருக்கள், ஆலய பிரதம குரு சோ.கிரிதரசர்மா, சாதகாசிரியர் ச.கந்தராஜேஸ்வரசர்மா, உதவி அர்ச்சகர்கள் மர்சரவணபவசர்மா, சோ.ஜனார்த்தனசர்மா, கி.சங்கரன்சர்மா, இ.குமாரசாமிசர்மா மற்றும் சா.பரமசிவநாதஐயர் ஆகியோர் மஹோற்சவக் கிரியைகளை நடாத்தவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X