2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயப் பொங்கல் விழா

Suganthini Ratnam   / 2013 மார்ச் 20 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.சிவகருணாகரன்


வரலாற்றுச் சிறப்பு மிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழாவையொட்டி விளக்கு ஏற்றும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சம்பிரதாயபூர்வமாக விளக்கு ஏற்றி பிரம்பு வழங்கப்பட்டு பண்டமெடுக்கும் வண்டில்கள் சாவகச்சேரி நோக்கிப் பயணமாகின.  பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டில்கள் ஆலயத்திலிருந்து புறப்பட்டுள்ளன. இவை வெளிக்கண்டல், பரந்தன், ஆனையிறவு, இயக்கச்சி, பளை, கொடிகாமம் வழியாக சாவகச்சேரி சென்று அங்கே பொங்கலுக்குத் தேவையான பண்டங்களையும் நேர்த்திக்கடன் பொருட்களையும் எடுத்து வரும்.  இந்த மாட்டு வண்டித் தொடரணியுடன் பெருமளவு பக்தர்கள் கால்நடையாகப் பயணிக்கின்றனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X