2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

அம்பாறை - வீரமுனை ஸ்ரீ சத்தாந்யாத்திரைப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்

அம்பாறை - வீரமுனை ஸ்ரீ சித்தாந்யாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காலை 8.00 மணிக்கு துவஜாரோகண கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 1.00 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.
10 தினங்கள் இடம்பெறும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள்வீதி, வெளிவீதி என்பன இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 12 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருஉலா இடம்பெறும்.

அதனைத்தொடர்ந்து 13ஆம் திகதி சனிக்கிழமை காலை பாற்குட பவனியும் பிற்பகல் 4.00 மணிக்கு மிகவும் சிறப்பாக விளங்கும் தேர்த்திருவிழா இடம்பெறுவதோடு மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X