2025 மே 19, திங்கட்கிழமை

பண்டாரியாவெளி ஸ்ரீநாகதம்பிரான் ஆலய மகோற்வசம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 11 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, பண்டாரியாவெளி ஸ்ரீநாகதம்பிரான்  (நாககட்டு) ஆலயத்தின் வருடாந்த மகோற்வசம் எதிர்வரும் 12.07.2013 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 19.07.2013 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 13.07.2013 அன்று அதிகாலை 5 மணிக்கு நாகதம்பிரானுக்கு பால், பழம் வைக்கும் நிகழ்வு இடம்பெறும். 12ஆம் திகதி கிராம சாந்தி, வாஸ்த்து சாந்தி என்பன இடம்பெற்று திருக்கொடியேற்றம் இடம்பெறும். 13ஆம் திகதி பட்டிப்பளைக் கிராம மக்களின் திருவிழாவும் அன்றையதினம் பால், பழம் வைக்கும் நிகழ்வும் 14ஆம் திகதி அம்பிளாந்துறைக் கிராம மக்களின் திருவிழாவும்  15ஆம் திகதி பண்டாரியாவெளி படையாண்டவெளி கிராம மக்களின் திருவிழாவும்  16ஆம் திகதி கடுக்காமுனை திருவிழாவும்  17ஆம் திகதி மகிழடித்தீவு கிராம மக்களின் திருவிழாவும்  18ஆம் திகதி அரசடித்தீவு கிராம மக்களின் திருவிழாவும்  19ஆம் திகதி மாபெரும் தேசத்துப் பொங்கல் பொதுத்திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக மேற்படி ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0

  • arul Friday, 12 July 2013 10:29 PM

    ஸ்ரீ வேம்படி நாகதம்பிரான் ஆலயம்
    கிழக்கிலங்கையில் அனைவராலும் போற்றப்படுகின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ வேம்படி நாகதம்பிரான் ஆலய மகோற்சவம் - 2013. மட்டக்களப்பு மாவட்டத்திலே இயற்கை எழில் நிறைந்த விவசாய நிலங்களை அதிகமாகக் கொண்ட செல்வச் செழிப்பு மிக்க புண்ணிய பூமியாக விளங்குகின்ற திருப்பளுகாமம் ஸ்ரீ வேம்படி நாகதம்பிரான் ஆலய மகோற்சவ பெருவிழா இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமை 13.07.2013 ஆரம்பமாகி
    எதிர் வரும் வெள்ளிக் கிழமை 19.07.2013 நிறைவு பெரும் பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டு ஸ்ரீ வேம்படி நகதம்பிரானின் திருவருட் கடர்ட்ஷத்தைப் பெற்குமாறு நகதம்பிரானின்
    பெயரால் கேட்டுக்கொல்கி ன்றோம்
    இவ்வண்ணம்
    ஆலய பரிபாலன சபையும் திருப்பணி சபையும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X