2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாவடி ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வி.ரி.சகாதேவராஜா


காரைதீவு மாவடி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம்  இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலய தர்மகர்த்தா மா.வடிவேல் முன்னே கும்பம் தாங்கி செல்ல பின்னே அலங்கரிக்கப்பட்ட முத்துச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானை சமேத  முருகப்பெருமானும் விநாயகப்பெருமானும் வீதியுலா வந்து தீர்த்தமாடினர்.

காவடியாட்டம், பாற்காவடி, முட்காவடி என்பனவும் இதன்போது நடைபெற்றன.

இதேவேளை, காரைதீவு மாவடி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா ஊர்வலத்தில் நேர்த்திக்காக காவடி எடுக்கும் அடியார்களுக்கு அலகு குத்தும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நந்தவனசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. காவடி எடுக்கும் ஒவ்வொரு அக்யாருக்கும் முறைப்படி சமய ஆசாரப்படி அலகு – முள்ளுக் குத்தும் நிகழ்வு நடைபெற்றது.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .