2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புளியந்தீவு தூய மரியாள் ஆலய கொடியேற்றம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தூய மரியாள் பேராலய பங்குத் தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், பேராலய உதவி பங்குத் தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் மற்றும் அருட்தந்தை ரி;.ஏ.ஜூலியன் ஆகியோர் தேவாலய மற்றும் வட்டாரக் கொடிகளை ஏற்றி வைத்தனர்.

ஆலய பாடல் குழுவினரால் தூய மரியாளின் சிறப்பைக் கூறும் பாடல்கள் பாடப்பட்டன. கொடியேற்ற கூட்டுத்திருப்பலியில் திருச்செபமாலை, பிரார்த்தனை, என்பன இடம்பெற்றன.

பேராலய பங்குத் தந்தை மற்றும் அருட்தந்தை ரி.ஏ.ஜூலியன் ஆகியோர் கொடியேற்ற கூட்டுத்தருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

விண்ணேற்பு அன்னையின் திருச்சுரூபப் பவனி 14.08.2013 புதன் மாலை இடம்பெற்று மறுநாள் காலை திருவிழா கூட்டுத்தருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .