2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் நடைபெற்ற தேர்த்திருவிழாக்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா, வி.விஜயவாசகன் 

 
புத்தாண்டு தினமான திங்கட்கிழமை (14) யாழ்.மாவட்டத்தின் பல ஆலயங்களில் தேர்த்திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.

வண்ணை ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயம், கலட்டி அம்மன் ஆலயம், கலட்டிப் பிள்ளையார் ஆலயம், சீரணி அம்மன் ஆலயம், கேசாவில் பிள்ளையார் ஆலயம், சீரணி அம்மன் ஆலயம், தாவடிப் பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட பல இடங்களில் தேர்த் திருவிழா உற்சவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் யாழ்.கலட்டி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா நடைபெற்ற போது, தேர் பீடத்துடன் சரிந்து கீழே வீழ்ந்ததில் குருக்கள் உட்பட மூவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்திருவிழாவில் அடியார்கள் காவடி, கற்பூரச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .