2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய திருவிழா

Kanagaraj   / 2014 ஜூன் 25 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


அருள்மிகு மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா புதன்கிழமை (25) ஆரம்பமாகியது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் அவர்களின் தலைமையில் பூஜைகள் மற்றும் கிரியைகள் என்பன நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் ஜீலை மாதம் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

விழாக் காலங்களின் போது களுதாவளை இந்து இளைஞர் மன்றத்தினரது அன்னதான நிகழ்வும், பஜனை கூட்டுப் பிரார்தனைகள் என்பன இடம்பெறவுள்தோடு, தூர இடங்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .