2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை திருக்கதவு திறத்தலுடன்  ஆரம்பமாகியது.

முத்தமிழும் சிறந்திலங்க முக்கனியும் விளைந்து வீரமுடன் கல்வியும் வெகுவாக வளர்ந்து நிற்கும் முனைக்காடு கிராமத்தில் குடிகொண்டிருக்கும் முத்துமாரியம்மனுக்கு நிகழும் ஜய வருடம் ஆனித்திங்கள் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய சடங்கு உற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை (12) சர்க்கரை அமுதுடன் இனிதே நிறைவுற உள்ளது.

உற்சவ காலங்களில் கதாப்பிரசங்கங்களும் கலை நிகழ்வுகளும் நடைபெற்று அன்னதான நிகழ்வுகளும் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X