2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தீமிதிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பில், பிரசித்திபெற்ற ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவத்தையொட்டி நேற்று(9) நடைபெற்ற தீமிதிப்பு வைபவத்தில் அனுராதபுர பெமடுவ விகாரையில் உள்ள சுமணதிஸ்ச தேரோவும் கலந்துகொணடமை குறிப்பிடத்தக்கது.

மகோற்சவத்தின் இறுதிநாளான புதன்கிழமை (9) தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான அடியார்கள் இத் தீமிதிப்பில் கலந்துகொண்டு தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.

இந்நிகழ்வில் அனுராதபுர பெமடுவ விகாரையில் உள்ள சுமணதிஸ்ச தேரோவும் தீமிதிப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை (1) ஆரம்பமானது. உற்சவக் கிரியைகளை  விஸ்வப்பிரம்மஸ்ரீ எஸ் சற்குணராஜாக் குருக்கள் தலைமையில் உதவிக் குருமார்கள் நிறைவேற்றினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .