2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இன்று வெள்ளிக்கிழமை (11) அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கண்ணகை அம்மன் ஆலயத்துடன், அருகிலுள்ள தோப்புப் பிள்ளையார் ஆலயம் மற்றும் முருகன் ஆலயம் ஆகியவற்றினையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மயிலிட்டிப் பகுதியினைச் சேர்ந்த மக்களை மேற்குறித்த ஆலயங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக யாழ்.பாதுகாப்புப் படைத்தரப்பினால் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலிற்கு பொதுமக்கள் இன்று (11) அழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, இராணுவத்தினர், அங்கு வந்த மக்களை இராணுவ வாகனங்களில் ஏற்றி மயிலிட்டியிலுள்ள இந்த ஆலயங்களுக்குக் கூட்டிச் சென்றனர்.

கண்ணகை அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகள் தொடர்ந்து இடம்பெற்றிருந்திருந்தால் இன்று (11) தேர் உற்சவம் இடம்பெற்றிருக்கும். எனவே தேர் உற்சம் இடம்பெறாததால்  மக்கள் பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதியம் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றன.
இவ் ஆலயத்திலிலுள்ள தேர், சுவாமி காவும் வாகனங்கள், சிலைகள் என்பன சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .