2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தீர்த்தோற்சவம்

Thipaan   / 2014 ஜூலை 26 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு


திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் திருக்கோவில் கடற்கரையில் இன்று (26) இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட கிரியைகள், வழிபாடுகளின் பின் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களால் தீர்த்தோற்சவத்திற்காக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டார்.

தீர்த்தோற்சவக் கிரியைகளை சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.

ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்சவமானது கடந்த 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று இடம்பெற்ற  இறந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிரார்த்திக்கும் பிதிர்க்கடன் தீர்க்கும்  தீர்த்தோற்சவத்துடனும் கொடியிறக்கல் வைபவத்துடனும் நாளை நடைபெறும் பூங்காவனத்திருவிழா, 28ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூசை என்பவற்றுடன் நிறைவுபெறவுள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .