2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியா பெரியகட்டு அந்தோனியார் ஆலய பெருவிழா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, செட்டிகுளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா நேற்று  ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க பெரியகட்டு அந்தோனியார் ஆலயப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார், அருட்பணி எம்.ஏ.ஜெயசீலன் அடிகளார் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியின் நிறைவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெற்றது. குறித்த திருவிழா திருப்பலியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .