2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம்

Super User   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

 இத்திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவு பெறவுள்ளதாக கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தெரிவித்தார்.

கிரியா கால நிகழ்வுகளாக 28ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4மணி முதல் 03ஆம் திகதி புதன்கிழமை வரை ஸ்நபனாபிஷேகம், யாகபூசை, தம்பபூசை, திக்குப்பலி, வசந்த மண்டப்பூசை, சுவாமி உள்வீதி வலம் வருதல், போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

மேலும் 14ஆம் திகதி தேரோட்டமும் அதனைத் தொடர்ந்து திருவேட்டை என்பன இடம்பெற்று 15ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல் திருப்பொற்சுண்ணம், தீர்த்தம், யாககும்பாபிஷேகம், திருக்கல்யாணம், பொன்னூஞ்சல், கொடியிறக்கம், சந்திவிசர்ச்சனம், சண்டேஸ்வர் உற்சவம், என்பன நடைபெறவுள்ளதாகவும் மேற்படி ஆலயத்தின் பிரதம குரு மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .