2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தீமிதிப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாகரை புச்சாக்கேணி ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு விழா சனிக்கிழமை (23) இடம்பெற்றது.

கடந்த 19ஆம் திகதி ஆரம்பமான இவ் உற்சவமானது தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

இறுதி நாள் உற்சவத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு தீமிதிப்பு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

 உற்சவகால பூசைகள் அனைத்தும் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு கிரியா நன்மனி சிவஸ்ரீ.கு.கார்மேகன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .