2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அம்மன் ஆலயத்தில் இருவேறு அதிசயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, இலங்கைத்துறையில் அம்மன் சிலையொன்றில் கண்கள் திறக்கப்பட்ட அதிசய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
மேற்படி பிரதேசத்திலுள்ள நாச்சியார் கோயிலிலே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது..

இதனைத் தொடர்ந்து அம்மன் கலை வந்து ஆடிய பக்தர் ஒருவர், கடலுக்குச் சென்று அங்கு பானை ஒன்றில் நீரை எடுதது வந்து பக்தர்களுக்கு வழங்கினார்.

இந்நீரை தீர்;த்தமாக அருந்திய பக்தர்கள் இது நன்நீரைபோன்று மிகவும் சுவையாக இருந்தததாக தெரிவித்தனர்.

இவ்விரு அதிசய நிகழ்வுகளையும் காண்பதற்காக பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்தில் ஒன்றுகூடினர்.

திருகோணமலை, மட்டக்களப்பு வீதியில் வெருகல் பிரதேச செயலக சந்தியில் இருந்து ஈச்சிலம்பற்று ஊடாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.

பிரதி வெள்ளிக்கிழமைகளில் விசேட வழிபாடுகள் இவ் ஆலயத்தில் நடைபெறுகின்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .