2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய முத்தேர் பவனி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித் ராஜபக்ஷ

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேக பூஜையுடன் மும்மூர்த்திகளின் முத்தேர் பவனி வெள்ளிக்கிழமை (29) ஆரம்பமானது.

இன்று சனிக்கிழமை (30) முத்தேர் பவனி ஆலயத்தை வந்தடைந்தவுடன் பச்சை சார்த்தி திருமூர்த்திகளுக்கு பிராயசித்த அபிஷேகம் இடம்பெற்று தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கம்; இடம்பெறும்.

மேலும், 31ஆம் திகதி மாலை பூங்காவனத்திருவிழா, திருவூஞ்சல், சண்டேஸ்வரர் உற்சவம் என்பன இடம்பெறவுள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி வைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறவுள்ளது.

இத்திருவிழாவில், 21ஆம் திகதி வியாழக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 27ஆம் திகதி புதன்கிழமை திருச்சூரக வேட்டைத் திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை பறவைக்காவடி, பாற்குடம், கற்பூரச்சட்டி எடுத்துவரப்பட்டு பாலாபிஷேகமும் இடம்பெற்றது.

இவ்;வாலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ. ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது.

 மேலும், உற்சவ காலங்களில் அடியார்களுக்கு பகல் மற்றும் இரவு வேளைகளில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X