2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ வீரையடி விநாயகர் தீர்த்தோற்சவம்

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, பேத்தாழை வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ விழாவில் இறுதி நாளாகிய இன்று ஞாயிற்றுக்கிழமை (31) தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பிரமோற்சவ விழாவானது தொடர்ந்து 9 தினங்கள்  நடைபெற்று 10 ஆம் நாள் ஆகிய இன்று சுவாதி நட்சத்திரத்தில் தீர்தோற்சவம் நடைபெற்றது.

பிரமோற்சவ பிரதம குரு க்ரியாகரம ஜோதி பிரம்மஸ்ரீ இலஷ்மீகாந்த ஜெகதீசக்குருக்கள் தலைமையில் உற்சவ கால விழாக்கள் இடம்பெற்றதுடன் இன்றைய தீர்த்தோற்சவத்தில் பெருமளவிலான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமியின் அருளினை பெற்றுச் சென்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .