2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குட முழுக்கு பாமாலை இறுவெட்டு வெளியீடு

Super User   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மகாகணபதிப் பிள்ளையார் கோவில் பஞ்சதள இராஜகோபுர கும்பாபிஷேகத்தையொட்டி  திருமதி ஜெனித்திரா ஜெயரூபனினால் பாடப்பட்ட  குடமுழுக்கு பாமாலை இறுவெட்டு வெளியீடு ஆலய மண்டபத்தில் வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிகபீட முன்னாள் பீடாதிபதி க.தேவராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆசியுரையை ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ சோ.பாலகிருஷ;ணகுருக்கள் வழங்கினார்.

வெளியீட்டுரையை நல்லூர் பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.தமிழ்மாறன் நிகழ்த்தினார்.

இறுவெட்டை பாடலாசிரியர் வெளியிட்டு வைக்க, முன்னாள் பீடாதிபதி க.தேவராசா பெற்றுக்கொண்டார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .