2025 மே 17, சனிக்கிழமை

மயில் கட்டு திருவிழா

Thipaan   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் மயில் கட்டு திருவிழா நேற்று மாலை (06) நடைபெற்றது. மயில் கட்டுத்திருவிழாவின்போது முருகப்பெருமானுக்கும் வள்ளிக்கும் காந்தாரு முறையில் திருமணம் நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற சண்முகா யாகத்தில் முருகப்பெருமானை மயில்மேல் எழுந்தருளச்செய்து, மயில்மேல் வந்தமர்ந்த முருகப்பெருமானை மறைத்துக்கொண்டு வந்து வள்ளியமையின் ஆலயத்தில் வந்ததும் இருவருக்கும் வள்ளியமையின் பூட்டிய அறைக்குள் மறைத்து திருமணம் நடைபெற்ற போது ஆலயத்தில் தீ மிதிப்பு நடைபெற்றது.

வள்ளியின் ஆலயம் வேடுவ முறைப்படி தமிழ் பாரம்பரிய முறையில் ஆலயம் சோடிக்கப்பட்டு ஆடியார்கள் முருகன் மற்றும் வள்ளியின் திருமணத்தைக் கொண்டாடவென பரிசுப்பொருட்கள், பூ மாலைகள், தேன் திணைமா, இனிப்பு பண்டங்களுடன் திருமண நிகழ்வை எதிர்பார்த்தவண்ணம் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடைபெற்றதும் திருமணக்கோலத்துடன் முருகன் மயில் மேல் ஏறி வெளிவீதி வலம்வந்து ஆடியார்களுக்கு காட்சிகொடுத்தார்.

ஆலய கிரியைகள், சிவ ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன. சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹோற்சவ திருவிழாவானது கடந்த  திங்கட்கிழமை (25) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .