2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருவாசகம் முற்றோதல்

Thipaan   / 2015 ஜனவரி 11 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


அம்பாறை - வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில், திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று(11)  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு பூசை வழிபாடுகளை தொடர்ந்து  வீதியுலா இடம்பெற்ற பின்னர், நந்திக் கொடி ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடந்து ஓதுவார்களால் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. இந் நிகழ்வு இன்று மாலை வரை இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரவித்தனர்.





 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .