2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புனித அன்னமாள் ஆலய திருவிழா

Kogilavani   / 2015 மார்ச் 09 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

சிலாபம், தலவில் புனித அன்னமாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை(8) காலை நடைபெற்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இத்திருவிழாவில், ஆராதனைகள் இடம்பெற்று வந்ததுடன் நேற்று இரவு வெஸ்பர் ஆராதனை நடைபெற்றது.

சிலாபம் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய பொன்னனைய்ய ஜோசப் ஆண்டகை ஆகியோர் இணைந்து நேற்று காலை திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்னம்மாளின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .