Sudharshini / 2015 மார்ச் 19 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கள்ளியங்காடு அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு, வியாழக்கிழமை (19) காலை நடைபெற்றது.
விநாயகர் பூஜைகளுடன் சங்காபிஷேக விஞ்ஞாபனம் ஆரம்பமானது. இதன்போது, 108 சங்குகள் அடுக்கப்பட்டு விஷேட பூஜைகள், ஹோம பூஜைகள் என்பன நடைபெற்றன.
தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
கிரியைகள் ஆலயகுரு சிவஸ்ரீ ஜெயதீஸ்வர சர்மா தலைமையில் பிரம்மன்தானு வாசுதேவ சிவாச்சாரியரினால் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட ஆஞ்சநேயர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தினை குறிக்கும் வகையில் அதன் திதியில் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
9 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago