Thipaan / 2015 மார்ச் 23 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சசிக்குமார்
திருகோணமலை, தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் குடமுழுக்கு பெருவிழா புதன்கிழமை (25) காலை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு மூர்த்திகளுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (23) காலை ஆரம்பமனது. இந்நிகழ்வு நாளை மாலை 3.00 மணி வரை நடைபெறும்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெருமளவிலான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் இதில் கலந்து கொண்டார்.
தம்பலகாமம் இந்து இளைஞர் மன்றம், திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை, வலயக் கல்வி அலுவகம் என்பனவற்றால் தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன.



7 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago