2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மயிலம்பாவெளி அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம்

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்

இலங்கையின் மிகப்பிரமாண்டமான ஆலயமாகவும் இலங்கையில் ஒரேயொரு காமாட்சி அம்மன் ஆலயமாகவும் உள்ள மட்டக்களப்பு மயிலம்பாவெளி அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர் உற்சவம் வெள்ளிக்கிழமை (27) சிறப்பாக நடைபெற்றது.

நேற்று காலை விஷேட கிரியைகள் நடைபெற்று அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற பின்னர், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்பாளின் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

பெண்கள் ஒரு பகுதியாகவும் ஆண்கள் ஒரு பகுதியாகவும் நடைபெற்ற இந்த தேர் உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேரோடும் அம்மன் ஆலயங்களில்,  ஒரேயொரு ஆலயமாக காமாட்சி அம்பாள் ஆலயம் காணப்படுகின்றது.  கடந்த 20ஆம் திகதி ஆரம்பமான காமாட்சி அம்பாள் ஆலயத்தில் இந்த வருடாந்த உற்சவத்தில், தினமும் சிறப்பான முறையில் உற்சவங்கள் நடைபெற்று வந்தன.

இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து தினமும் பெருமளவான அடியார்கள் வருகை தந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .