Gavitha / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் 3ஆம் நாள் திருவிழா செவ்வாய்கிழமை (31) இரவு 11 மணியளவில் நடைபெற்றது.
வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று மூலமூர்த்தியாகிய பிள்ளையார் மூசிக வாகனத்திலும் சிவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்திலும் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும் உள்வீதி, வெளிவீதி, மேள தாள வாத்தியங்கள் முழங்க வலம் வந்தது.
கிரியைகள் யாவும் பிரதிஸ்டா குரு செ.கு.சுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 4 மணியளவில் வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமான இத்திருவிழாவானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) காலை 8 மணியளவில் தீர்த்தோற்சவத்தீடன் நிறைவு பெறவுள்ளது.


6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026