2025 மே 17, சனிக்கிழமை

அருள் மிகு ஸ்ரீசந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீசந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை (03) சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 4.30 மணிக்கு அபிசேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி,   காலை 6.00 மணிக்கு எம்பெருமானின் தேர்பவனி ஆரம்பமானது

கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப்பெருமான் ஒரு தேரிலும் விநாயகப் பெருமான் ஒரு தேரிலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஒரு தேரிலுமாக, மூன்று தேர்களில் பவனி நடைபெற்றது.

பிரம்ம ஸ்ரீசுந்தர செந்தில் ராஜ குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றதுடன், காவடிகள், கரகாட்டம், பால்குட பவனியுடன்  நாதஸ்வர தவில் முழக்கம், பறை மேள முழக்கத்துடன் இத்தேர் திருவிழா கல்முனை பிரதான வீதி வழியாக இடம்பெற்று ஆலயத்தை  சென்றடைந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .